Home தென்னிலங்கைச் செய்திகள் அடுத்த தேர்தலுடன் சஜித்தின் கட்சி ‘அவுட்’! – சரத் பொன்சேகா!
தென்னிலங்கைச் செய்திகள்

அடுத்த தேர்தலுடன் சஜித்தின் கட்சி ‘அவுட்’! – சரத் பொன்சேகா!

Share
Share

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பத்து இலட்சம் வாக்குகளை மட்டுமே பெறும் என்றும், இது முன்னைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விட மிகக் குறைவாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் குறிக்கின்றது.

முதலில் குமார வெல்கம வெளியேறினார். பின்னர் சம்பிக்க, ராஜித, தலதா மற்றும் பொன்சேகா ஆகியோர் வெளியேறினர்.

மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் ஒவ்வொரு முடிவையும் ஏற்றுக்கொண்டு, ஆமாம் போடுபவர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இந்தநிலையில், அத்தகையவர்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பயணத்தை முன்னெடுப்பது கடினமான காரியம்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...