ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களை (OTP) திருடுவதை நோக்கமாகக் கொண்ட போலி அழைப்புகள் மற்றும் செய்திகள் மூலம் வட்ஸ்அப் பயனர்களைக் குறிவைத்து மோசடி திட்டங்கள் இடம்பெறுவதாகக் பொலிஸ் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் குற்றவாளிகள், குரல் அழைப்புகள் மற்றும் ஏமாற்றும் குறுஞ்செய்திகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத வட்ஸ்அப் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி, தனிநபர்களை ஏமாற்றி, அவர்களின் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்களைப் பகிர்ந்து கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் வட்ஸ்அப் கணக்கை முழுமையாக அணுகி, பயனரைப் போல ஆள்மாறாட்டம் செய்து, அவர்களின் தொடர்புகளுக்குப் போலி செய்திகளை அனுப்பி பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.
அதன்படி, இதுபோன்ற நிதி மோசடிகள் தொடர்ந்து வெளிவருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை வலியுறுத்தியுள்ளது.
எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு ஒன்லைன் கணக்குகளின் OTP எண்கள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று பொலிஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
Leave a comment