Home தாயகச் செய்திகள் நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

Share
Share

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு

வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பூசகர்கள் இருவர் நயினாதீவில் உள்ள பிள்ளையார் ஆலயம் மற்றும் அம்மன் ஆலயம் ஆகியவற்றில் பூசகர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு நேற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

35 வயதான மற்றைய பூசகர், நயினா தீவில் வசித்து வரும் முருகன் கிருஷ்ணகுமார் (வயது 43) என்பவரின் வீட்டுக்குச் சென்று அவருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, மறைத்து வைத்திருந்த வாளினால்

கிருஷ்ணகுமாரை சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...