Home தென்னிலங்கைச் செய்திகள் வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!

Share
Share

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சேவை மேலும் 05 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இதுவரை வெரஹெர அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த சேவை, இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்ட அலுவலகங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ள நபர்கள், இலங்கையில் தற்காலிகமாக வாகனங்களைச் செலுத்துவதற்காக இந்த உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்புவோர், தொடர்ந்தும் வெரஹெரவிலுள்ள பிரதான சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்திற்கே செல்ல வேண்டும் என ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...