யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என யாழ்.நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக வலியுறுத்தியுள்ளார்.
தையிட்டி பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி தனியார் மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமானது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், புதிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
Leave a comment