வவுனியாவில் பெய்த கனமழை மற்றும் புயல் தாக்கத்தால் 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்த மழையால் தாழ்நில பிரதேசங்களில் நீர்வரத்து அதிகரித்து குளங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளது.
இதனால் பல குளங்கள் வான் பாய்ந்ததுடன் 114 குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
இதனால், மக்களின் குடிமனைகள், விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
உடைப்பெடுத்த 114 குளங்களில் 33 குளங்களின் அணைகளை இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஏனைய குளங்களின் கட்டுமான பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் – என்றும் தெரிவிக்கப்பட்டது.
Leave a comment