முன்னாள் அமைச்சர் சி. பி. ரத்நாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வருமானத்தை விஞ்சிய சொத்துகள் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைவாக நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்கச் சென்றபோதே முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment