Home தாயகச் செய்திகள் வடக்கில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வடக்கில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு!

Share
Share

நாளொன்றுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) 2026 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் வட மாகாணத்தில் பாதிவாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்றச் சம்பவங்களும், 2021 ஆம் ஆண்டில் 577 சபைர் குற்றச் சம்பவங்களும், 2022 ஆம் ஆண்டில் 654 சைபர் குற்றச் சம்பவங்களும், 2023 ஆம் ஆண்டில் 472 சைபர் குற்றச் சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டில் 1,539 சைபர் குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இது தவிர, இந்த ஆண்டின் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 2,368 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, நாட்டின் பல மாவட்டங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் கணினி குற்றப் புலனாய்வு துணைப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...