Home தாயகச் செய்திகள் கொடிகாமத்தில் இளைஞர் மரணம்! விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொடிகாமத்தில் இளைஞர் மரணம்! விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

Share
Share

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கொடிகாமம் குளத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் இன்று திங்கட்கிழமை (17) ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கொடிகாமம் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கடமையில் இருக்க வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அந்த மரணம் சம்பவித்த நேரம் கடமையில் இருக்காமல் சட்டத்திற்கு முரணாக அந்த இடத்தில் நின்றிருந்தார். ஆகவே அந்த மரணத்தில் குடும்பத்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த விடயத்தை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

அந்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

பொலிசாரின் அராஜகமும் துஷ்பிரயோகமும் இந்த விடயத்தில் உள்ளதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம். நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...