யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் போதைப்பொருட்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கைதுகள் கடந்த இரு நாட்களில் பல பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனைளின்போது இடம்பெற்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேரும் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவருமாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, அரசடி பகுதியில் ஹெரோயினுடன் நேற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேகநபரிடம் இருந்து 2.25 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. அத்துடன், சந்தேகநபர் கொழும்பை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Leave a comment