Home தாயகச் செய்திகள் பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு தீர்மானம்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பிள்ளையானை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு தீர்மானம்!

Share
Share

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார்.

இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துவருகிறது.

எனினும், கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதன்படி, தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய சுமார் ஏழரை மாதங்கள் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதனூடாக தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அறிவித்து உத்தரவிடுமாறு கோரி, பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு நாளை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...