Home தாயகச் செய்திகள் கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

Share
Share

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யூனியன் குளத்தை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்கு பயணமாக இருந்த நிலையில்
ஐந்து தினங்களுக்கு முன்னர் கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல் போனார்.

காணாமல்போன மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில்
உறவினர்களும் இளைஞனைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார்.

இளைஞரின் சடலம் உடல் கூராய்வுக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைக்
கப்பட்டுள்ளது. அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...