வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக்கூறி, 30 கோடி ரூபா நிதியை அபகரித்த நபர் ஒருவர், யாழ்ப்பாணம் நிதிக்குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதான அல்பிரேட் எட்வேட் ரொசான் என்பவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில், குறித்த நபர் தொடர்பில் தலா நான்கு முறைப்பாடுகள், பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், யாழ்.நிதிக் குற்றத்தடுப்புப் பிரிவினரால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர், மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டவேளை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Leave a comment