குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குருநாகல் – நாரம்மல லஹிட்டியாவ, ஹொரம்பாவ – மாவி எல வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி தொலைத்தொடர்பு கம்பத்துடன்
மோதி கவிழந்து விபத்துக்குள்ளாது.
இதன்போது, லொறியின் பின்புறத்தில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்த லொறியின் கீழ் அகப்பட்டனர்.
லொறியில் நசியுண்டு, படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக நாரம்மல மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் உயிரிழந்தனர்.
இறந்தவர்கள் இருவரும் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த 26, 29 வயதுடையவர்களாவர்.
இந்த லொறியில் ஐவர் பயணித்திருந்தனர். லொறியின் சாரதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த 49 வயதான நபர் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Leave a comment