நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வீதி விபத்து தொடர்பில் கொழும்பில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த விபத்துகள் ஏற்படாமல் தடுக்கக்கூடியவை என தெரிவித்த அவர், இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பயனளிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியுடன் முன்நோக்கிச் செல்லும்போது, விபத்துகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக விபத்துகள் மற்றும் மருத்துவமனைகளில் ஏற்படும் தாக்கங்களையும், குறைக்க முடியுமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Leave a comment