Home தென்னிலங்கைச் செய்திகள் சீனாவில் பிரதமர் ஹரிணி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சீனாவில் பிரதமர் ஹரிணி!

Share
Share

சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்தார்.

பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின் (Cao Shumin) வரவேற்றார்.

இந்த விஜயத்தின் முதல் நாளில், பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களான தடைசெய்யப்பட்ட நகரம் (அரண்மனை அருங்காட்சியகம்), ஏகாதிபத்தியக் கட்டிடக்கலை ஆகியன தேசிய அளவில் பாதுகாக்கப்பட்டு வரும் தொகுப்பாகும். அத்தோடு, சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானக் கலையின் மகிமையை எடுத்துக்காட்டும் சீனப் பெருஞ்சுவரும், சீனாவின் முக்கியமாகப் பாதுகாக்கப்படும் சின்னங்களாகத் திகழ்கின்றன.

எதிர்வரும் நாட்களில், பிரதமர் 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதுடன், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச சபைப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள இருக்கின்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும்...

கிணற்றில் தவறி வீழ்ந்த வயோதிபப் பெண் அராலியில் மரணம்!

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று தவறி கிணற்றில் விழுந்த நிலையில்...

வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராகச் செயற்படமாட்டோம் – அமைச்சர் லால் காந்த!

நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்படமாட்டோம் என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி...