சர்வதேச நாணய நிதியம் (ஐ. எம். எவ்.) மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியக்கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு நிபந்தனைகளை அடிமையாகப் பின்பற்றுவது நாட்டின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தென்னிலங்கையின் ஊடகம் ஒன்றின் ஆண்டு நிறைவையொட்டி கொழும்பு பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
Leave a comment