நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – கீரி கடற்கரை பகுதியில் திங்கட்கிழமை கடற்படையினர் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 56 ஆயிரத்து 870 மருந்து மாத்திரைகள், அழகு சாதனப் பொருட்களும் இதன் போது கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர் தாழ்வுபாடு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மருந்துகள், அழகு சாதனப் பொருட்களுடன் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
Leave a comment