ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அண்மைய தீர்மானம் குறித்து இன்றைய தினம் சிறப்பு அறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிடவுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அது தொடர்பில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியதாக அந்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் வெளியிடுவார்.
இந்தத் தகவலை அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Leave a comment