மாகாண சபைத் தேர்தலை விரைவில் பெறுவதற்குரிய எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் உக்கிரமாக முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தேசிய இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாகவே மாகாண சபைத் தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டது. உயிர்த் தியாகங்களுக்கு மத்தியிலேயே இந்த முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, மாகாண சபை முறைமை அவசியம்.
மாகாண சபைத் தேர்தல் பற்றி எதிரணிகள் கதைக்கின்றனவா எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இது பற்றி நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். மாகாண சபைகளின் கீழ் நிறைய பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளன. அந்த முறைமையில் ஜனாதிபதியின் எதேச்சதிகாரம் இருப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும்.
மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் வென்றெடுப்பதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஜனநாயக வழியில் எல்லாவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.
Leave a comment