குறிகட்டுவான் இறங்குதுறையினை பெருந்திட்டத்திற்கு அமைய (Master Plan) அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று புதன்கிழமை (01) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி குறிகட்டுவான் இறங்குதுறைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, ஆலோசனைகளையும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரிய அறிவுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கியதற்கமைய, அதன் தொடர் நடவடிக்கையாக பங்குதார்களுடனான கலந்துரையாடலாக இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர், மேலதிக செயலர்களான கே. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர், வேலணை பிரதேச செயலாளர், பிரதேச சபையின் செயலாளர், கடற்படை அதிகாரி மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.




Leave a comment