சட்டவிரோதமாக ஜோதிட நிலையத்தை இயக்கிய இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை தும்பளை வீதியில் சட்டவிரோத ஜோதிட நிலையம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையத்தை இந்தியர்கள் மூவரே நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையம் தொடர்பாக தும்பளை பிரிதேச கிராம அலுவலர் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினம் பருத்தித்துறை நகர பிதா நேரில் சென்று அவதானித்து குறித்த இந்தியர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும், நேற்று ஜோதிட நிலையம் இயங்கி வந்ததை அடுத்து நகரபிதா வின்சன் டீ டக்ளஸ் போல் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இந்திய பிரஜைகளின் கடவுச் சீட்டை பரிசோதனை செய்
போது குறித்த மூவரும் சுற்றுலா வீஸாவில் நாட்டுக்குள் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சட்டவிரோத ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த மூன்று இந்திய பிரஜைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Leave a comment