நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான மனநோய் இருக்கிறது என்று சிரேஷ்ட மனநல மருத்துவர் சஞ்சீவன அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மனநல நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
மேலும், நாட்டில் பதிவான தற்கொலைகளில 50 சதவீதம் மனநோய்களால் ஏற்படுகிறது என்று தெரியவந்துள்ளது.
தினமும் 08 பேர் தற்கொலை செய்கின்றனர்.
இது வருடத்துக்கு சுமார் 3 ஆயிரத்து 200 ஆக உள்ளது.
பெரும்பாலான இளைஞர்கள் மனச்சோர்வு எனப்படும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கைபேசிகளுக்கு அடிமையாதல், கஞ்சா, ஐஸ் போன்ற போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு என்பன மனநோய்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளன.
மதுவுக்கு அதிக நாட்டம் கொண்டவர்களும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்றும் அவர் கூறினார்.
Leave a comment