Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் கத்தோலிக்கத் தேவாலயத்தில் ஒரே பாலினத் திருமணம்?
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கையில் கத்தோலிக்கத் தேவாலயத்தில் ஒரே பாலினத் திருமணம்?

Share
Share

இலங்கையில் கத்தோலிக்க தேவாலயமொன்றில் ஒரே பாலினத் திருமணம் ஒன்று இடம்பெற்றதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இந்த வார இறுதியில் வெளியிட்ட தகவல், கத்தோலிக்க சமூகம் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின்போது உரையாற்றிய கர்தினால், இரண்டு இலங்கை பெண்கள் திருமணத்தை நடத்தும் அருட்தந்தையை ஏமாற்றி தேவாலயத்தில் திருமணம் செய்ததாகத் தெரிவித்தார்.

“இந்த பெண்களில் ஒருவர் ஹோர்மோன் மாத்திரைகளை பயன்படுத்தி தனது தோற்றத்தை ஆண் போல மாற்றியிருந்தார். அவருக்கு முகத்தில் உரோமங்கள் இருந்ததால் மதகுரு ஏமாற்றப்பட்டார். இந்தச் சம்பவம் இலங்கையிலேயே நடந்தது,” என்று கர்தினால் தெரிவித்தார்.

இதனிடையே, ஒரே பாலினத் திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட கர்தினால், “இரண்டு ஆண்களோ அல்லது இரண்டு பெண்களோ திருமணம் செய்தால், அவர்களால் எவ்வாறு சரியான குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதேநேரம், இலங்கையில் LGBTQ+ சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளையும் விமர்சித்த அவர் ஏற்றுக்கொள்ள முடியாத ஆசைகளை நிறைவேற்ற வரும் வெளிநாட்டவர்களால் நமது இளைஞர்கள் பலியாக அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்வார் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், ஒரே பாலின நாட்டமுள்ள நபர்களை கருணையுடன் நடத்த வேண்டும் என்றும், ஆனால் வெளிப்புற செல்வாக்கினால் வேறு வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள யாரும் வற்புறுத்தப்படக் கூடாது என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்....

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே இளம் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குறித்த...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...