இலங்கையின் இயல்புகளைக் கருத்திற்கொள்ளும்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மிகவும் அவசியமானது என்று இலங்கை சட்டக் கல்லூரியின் முதல்வர் பிரஷாந்த லால் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துடன் இணைந்த முறையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். இலங்கையின் அரசியல் வரலாற்றில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட இறுதி ஜனாதிபதியாக அநுரவே இருப்பார் என்று தேசிய மக்கள் சக்தி அரசு அண்மையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, இலங்கைக்கு நிறைவேற்று அதிகார முறைமை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சட்டக் கல்லூரியின் முதல்வர் பிரஷாந்த லால் டி அல்விஸ் இது தொடர்பில் ஊடங்களிடம் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் பல்வேறு இனக்குழுக்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்கும், வெளிநாட்டு செல்வாக்குகளைத் தடுப்பதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முக்கியமானது. எனவே, அதை இரத்துச் செய்வது தொடர்பில் சிந்திக்கக்கூடாது. அதேநேரம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வருபவர்கள், அந்த அதிகாரத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது அவசியம்.” – என்றார்.
Leave a comment