Home தென்னிலங்கைச் செய்திகள் மேல் மாகாணத்தில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் சிக்கின!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மேல் மாகாணத்தில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் சிக்கின!

Share
Share

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் சில பொருட்களை மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பேலியகொடை மீன் சந்தைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குப் பின்னால் உள்ள பகுதியில் இருந்து இந்தத் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள  பாதாள உலகக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மே என்பவரை விசாரணைக்குட்படுத்திய பின்னர், அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலக்கமைய இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த பகுதியில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கிகள், ரி – 56 ரக துப்பாக்கி ரவைக் கூடுகள், சுயமாக இயக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் இராணுவச் சீருடைகள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன என்று மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரியிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்...

சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார் – உதய கம்மன்பில தெரிவிப்பு!

நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார். பாதுகாப்பு பிரதி...

வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க...

யாழில் 14 பேர் கைது!

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் யாழ்ப்பாணம்...