அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அமெரிக்க விஜயத்தை நிறைவு செய்த நிலையில், ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில்
பங்கேற்பதற்காக, ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்தார்.
அந்த விஜயத்தை நிறைவு செய்து, நேற்று முன் தினம் இரவு ஜோன் எவ்.கெனடி சர்வதேச விமான நிலையத் தில் இருந்து, ஜப்பானுக்குப் பயணமானார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
இந்த விஜயத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளி நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இணைந்து கொண்டுள்ளார்.
Leave a comment