Home தென்னிலங்கைச் செய்திகள் வோல்கர் – அநுர நேரில் சந்திப்பு! மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

வோல்கர் – அநுர நேரில் சந்திப்பு! மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வு!

Share
Share

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கும் இடையிலான சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றதுடன் கடந்த வருடத்தில் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில்,...

தனியார் துறை ஊழியர்களின் வேதன அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கமைய, அரச துறையில் ஊழியர்களின் வேதன அதிகரிப்புக்கு இணையாகத் தனியார்...

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும்...