முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் சரத் மொஹொட்டி ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு பணியகத்தில் பதவியில் இருந்தபோது, பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டில், நிஷாந்த உலுகேதென்ன கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், குறித்த காணாமல் போனமை தொடர்பான குற்றச்சாட்டில் சரத் மொஹொட்டி கடந்த 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
Leave a comment