Home தாயகச் செய்திகள் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் நேரில் பேச தமிழரசுக்கட்சி முயற்சி! (கடிதம்)
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் நேரில் பேச தமிழரசுக்கட்சி முயற்சி! (கடிதம்)

Share
Share

தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை குறித்து நேரடியாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்திருக்கின்றார்கள்.

‘தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு’ என்ற தலைப்பில் அமைந்த அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் வருமாறு:-

“நமது கட்சியின் சமீபத்திய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக உங்களுக்கு எழுத முடிவு செய்யப்பட்டது.

நீங்கள் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் ஆகின்றது. உங்கள் தேர்தல் அறிக்கையிலும் மற்றும் பல அறிவிப்புகளிலும் இந்த மிக முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பீர்கள் என நீங்கள் உறுதியளித்துள்ளீர்கள். இருப்பினும், கடந்த ஒரு வருடமாக இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாக, மேற்கூறிய பிரச்சினை தொடர்பாக உங்கள் அரசுடன் கலந்துரையாட நாங்கள் தயாராக உள்ளோம். அந்தவகையில் உங்களைச் சந்திக்க கீழே கையொப்பமிடப்பட்ட தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் எங்கள் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குழு உங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் நேரத்தில் உங்களைச் சந்திக்க ஒரு நேரத்தை ஒதுக்தித் தருமாறு வேண்டுகின்றோம்.” – என்றுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...