Home தென்னிலங்கைச் செய்திகள் மஹிந்த – விமல் சந்திப்பு (படங்கள்)
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மஹிந்த – விமல் சந்திப்பு (படங்கள்)

Share
Share

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, அம்பாந்தோட்டை, தங்காலை – கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த பின்னர், விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட விடுதலைப்புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய 5 ஆவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து திரும்பி தங்காலை – கார்ல்டன் இல்லத்தில் குடிபெயர்ந்தார் என்ற செய்தி, இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தியாகும்.

அரசியல் வேறுபாடுகள் இருந்த போதிலும், பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செயலாகும்.

தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிற பிரதிநிதிகள் தங்காலை – கார்ல்டன் இல்லத்தில் அவரைச் சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.” – என்றுள்ளது.

மொட்டுக் கட்சி  தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்த விமல் அணியினர், மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அவசரமாகச் சந்தித்துப் பேசியுள்ளமை தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...