“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. இது தொடர்பான சட்ட வரைவு இன்னும் சில நாட்களில் இறுதிப்படுத்தப்படும்.” – இவ்வாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“பயங்கரவாத் தடைச் சட்டத்தை நீக்குவதென்பது அரசின் தேர்தல் வாக்குறுதியாகும். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நாங்கள் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து, தற்போது சட்ட வரைவை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த விவகாரத்தைக் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட குழு தற்போது மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.” – என்றார்.
Leave a comment