கடந்த 2008 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்ட சந்தேக நபர்களின் பெயர் பட்டியலில் இருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் நீதிபதியால் நீக்கப்பட்டதை இரத்து செய்யுமாறு கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (15) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மனு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Leave a comment