Home தென்னிலங்கைச் செய்திகள் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் பெண் உட்பட இருவர் சிக்கினர்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் பெண் உட்பட இருவர் சிக்கினர்!

Share
Share

சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகள், டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுக்களையும் கஞ்சாவையும் பொதி  செய்ய பயன்படுத்தப்படும் பெட்டிகளுடன் பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணும், 45 வயதுடைய பெண்ணும் ஆவர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வர்த்தகர்கள் ஆவர்.

சந்தேகநபர்கள் இருவரும் டுபாயில் இருந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் கட்டுநாயக்க  விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரும் கொண்டு வந்த 5 பயணப் பொதிகளில் இருந்து 132 நவீன கையடக்கத் தொலைபேசிகள் , 14 டெப் கணினிகள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிகரெட்டுக்களையும் கஞ்சாவையும் பொதி செய்ய பயன்படுத்தப்படும் 1,700  பெட்டிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களின் மொத்தப் பெறுமதி 50 இலட்சம் ரூபா என விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...