Home பிரதான செய்திகள் கோபா குழுவின் புதிய தலைவராக எதிரணி எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவு!
பிரதான செய்திகள்

கோபா குழுவின் புதிய தலைவராக எதிரணி எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவு!

Share
Share

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய  நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத்  2025.08.06ஆம் திகதியன்று அந்தப் பதவியை இராஜிநாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது.

தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமின் பெயரை  நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல  முன்மொழிந்ததுடன்  நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன   வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர்  கபீர் ஹாசிம், அரசியல் கருத்து வேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செயற்பட்டு சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், முன்னாள் தலைவர் நாடாளுமன்றஉறுப்பினர் அரவிந்த செனரத்  பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியைத் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் புதிய தலைவர் குறிப்பிட்டார்.

புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் புதிய தலைவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி...