இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சீனத் தூதுவரின் கோரிக்கைக்கு அமைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலுமான அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து நேற்று வெளியேறுவதற்கு முன்னர், அவருடன் சீனத் தூதுவருடன் இது போன்ற ஒரு கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.
மேலும், மற்றொரு உயர்மட்ட முன்னாள் அரசியல்வாதியுடனும் சீனத் தூதுவர் எதிர்காலத்தில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment