Home தென்னிலங்கைச் செய்திகள் விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறும் மஹிந்த – தங்காலையில் வரவேற்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறும் மஹிந்த – தங்காலையில் வரவேற்பு!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கொழும்பு – விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வியாழக்கிழமை வெளியேறவுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டதையடுத்து மஹிந்த ராஜபக்‌ஷ விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேற முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
அம்பாந்தோட்டை – தங்காலையில் உள்ள அவரது இல்லத்துக்கு இன்று மாலை 4 மணியளவில் மஹிந்த ராஜபக்‌ஷ செல்லவுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
 
தங்காலையில், முன்னாள் ஜனாதிபதியை வரவேற்கும் விழா ஒன்றையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...