அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீற்றர் வீட்டுத் திட்டப் பகுதியில் நேற்று இரவு இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு பின்னர் கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய அலாவுதீன் ரிஷாத் என்ற இளம் குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட விசேட தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment