Home தாயகச் செய்திகள் ஐ. நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகுகிறது இலங்கை?!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ. நா. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகுகிறது இலங்கை?!

Share
Share

இலங்கையின் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் பிரச்னைகள் தொடர்பில் ஒரு பொறிமுறையை கோரி, பிரிட்டன் தலைமையிலான நாடுகளின் முக்கிய குழு இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அதன் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை முன்வைக்கும்போது, வாக்கெடுப்பு கோருவதில்லை என்று இலங்கை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகியவை முக்கிய குழுவில் உள்ள ஏனைய உறுப்பு நாடுகள் ஆகும்.

இலங்கை இந்த ஆண்டு ஒரு புதிய தீர்மானத்தை எதிர்கொள்கிறது. அரசாங்கத்தின் சார்பாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நேற்று முன் தினம் ஜெனிவாவில் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

இலங்கை உள்நாட்டு பொறி முறையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் முயற்சியைத் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஒரு நாடாக இலங்கை எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் எதிர்த்தாலும், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் பிரச்னைகளை கையாள்வதில் சர்வதேச சமூகத்தின் தொழில்நுட்ப உதவியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணி மனித புதைகுழி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர்வதில் இத்தகைய உதவி தேவைப்படலாம் என்று கருதப்படுகிறது.

முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் வரைவு இன்னும் ஜெனீவாவில் சுற்றுக்கு விடப்படவில்லை. தீர்மானத்தை முன்வைப்பதற்கு முன்னதாக, அதனுடன் நட்பு கொண்ட நாடுகளிடம், நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவான உரைகளை நிகழ்த்துமாறு கோர இலங்கை திட்டமிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.  இதற்கு அமைய...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் நிறைவேறியது!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது,...

ஒரு சைக்கிள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி! பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர்!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப் பகுதியில் இன்று புதன்கிழமை ஒரு சைக்கிளும், 4...

கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் மரணம்!

அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீற்றர் வீட்டுத் திட்டப் பகுதியில் நேற்று...