கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இரவு கடுகதி ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்திவெளி. ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வரதராஜா கிருஷ்ணகாந்தன் (வயது 28) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் நேற்று சனிக்கிழமை இரவு மது போதையில் தண்டவாளத்தில் தலையை வைத்துத் தூங்கியதால் ரயில் மோதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின் இன்று காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொண்டு வரப்பட்டது.
விபத்து தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment