Home தாயகச் செய்திகள் தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்து குடும்பஸ்தர் பலி!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்து குடும்பஸ்தர் பலி!

Share
Share

திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 9ஆம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை காளிராசா (வயது 45) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய நிலையில் ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் உள்ளதைக் கண்டு மேற்படி நபர் அதனைக் காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தலைமன்னாரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம்!

தலைமன்னாரில் காட்டுப் பகுதிக்குள் சற்று எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அந்தச்...

தேவைப்பட்டால் உரிய நேரத்தில் நாடாளுமன்றம் வருவார் ரணில் – ஐக்கிய தேசியக் கட்சி அதிரடி அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேவைப்பட்டால் சரியான நேரத்தில் நாடாளுமன்றத்துக்குள் நுழைவார் என்று...

பெரும்பாலான கைதுகள் அரசியல் கண்காட்சிகள் என்கிறது ஐ.தே.க!

நாட்டில் நடைபெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே நடக்கின்றன. கைதாகும் 100 பேரில் 98 பேர்...

தையிட்டியில் போராட்டம்!

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையைஅகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி...