Home தாயகச் செய்திகள் உடையார்கட்டு விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

உடையார்கட்டு விபத்தில் ஒருவர் பரிதாப மரணம்!

Share
Share

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப்  பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றின் செலுத்துநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இன்னொருவர் காயமடைந்து தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றுக்கு சீல்!

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை...

ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு! (படங்கள்)

மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடி இன்று செவ்வாய்க்கிழமை...

யாழில் வாள்வெட்டுச் சம்பவம்; ஒருவர் காயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று...

போதைப்பொருள் கொள்கலன்கள் விவகாரம்; அரசாங்கம் மீது நாமல் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளை மூடிமறைப்பதற்கு, பொதுஜன பெரமுன உள்ளிட்ட தரப்புகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை...