அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சீரி வாரம் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் 4 நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.
அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகவும் சுதந்திரமாகவும் மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அலோக பண்டார சீரி வாரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது, க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment