கொழும்பு, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் கழுத்து நெரித்து ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தெஹிவளைப் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
தெஹிவளை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தெஹிவளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment