Home தென்னிலங்கைச் செய்திகள் 2000 ரூபா புதிய நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

2000 ரூபா புதிய நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Share
Share

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபா புதிய நினைவு நாணயத்தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நேற்று  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன்,  இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் ஆகும்.

தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ‘சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை’ என்ற ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு ஏற்ப இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இணைய நிதி மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குருநாகலில் விபத்து! நெடுங்கேணி இளைஞர்கள் இருவர் மரணம்!

குருநாகலில் லொறி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் வவுனியா, நெடுங்கேணியை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்து...

கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் – தமிழக மீனவர்கள் நடவடிக்கை!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்...

வீதிவிபத்துக்களாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில்!

நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளினாலேயே அதிகளவானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாக, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...