மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் கத்திமுனையில் தாலிக்கொடி திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வயோதிப பெண்ணொருவரின் 16 பவுண் தாலிக்கொடியே திருடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்நுழைந்த நபர் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி 16 பவுண் தாலிக் கொடியை அறுத்துக் கொள்ளையடித்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த பெண்ணின் கணவரின் ஈருருளியையும் குறித்த நபர் களவாடிச் சென்றுள்ளார்.
கொக்குவில் காவல்துறைக்கு உட்பட்ட சின்ன ஊறணியில் வசித்து வரும் குறித்த பெண் ஓய்வுபெற்ற செவிலியர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment