Home தென்னிலங்கைச் செய்திகள் பட்டதாரிகளை பணிக்கமர்த்த நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பட்டதாரிகளை பணிக்கமர்த்த நடவடிக்கை!

Share
Share

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதத்துக்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4 வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன என்று கல்வி, உயர்
கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நீதித்துறை நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் உடனடியாக வர்த்தமானி வெளியிடப்படும். இதன்மூலம் பட்டதாரிகள், ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

வேலையற்ற பட்டதாரிகள் கூட்டுசங்கத்தின் பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏற்கனவே, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி – தேவைக்கேற்ப ஏனைய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அத்துடன், ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை
திருத்துவதற்கும் வயது வரம்பை நீட்டிப்பதற்கும் தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களுக்கும் உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் இதன் போது இணக்கம் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

போதைக் கும்பலின் செயற்பாடுகள் அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளன – ஜனாதிபதி அநுர!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றக்கும்பல்களின் செயற்பாடுகள், அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்....

மந்திரிமனையின் வாயிற் கூரைகள் அகற்றப்படுகின்றன!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள்...

ஒரே நாளில் 5,221 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,221 பேர்...

சாட்சி இருந்தால் போர்க்குற்றம் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என்கிறார் பொன்சேகா!

இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று...