Home தாயகச் செய்திகள் கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

Share
Share

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இவர் தனது இரவு நேரக் கடமையை முடித்துக் கொண்டு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், மருதமுனை மக்கள் மண்டபம் முன்பாக நேர் எதிரே வந்த இ.போ.ச. பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானபோது அதே இடத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபையில் காவலாளியாக நிரந்தர நியமனம் பெற்ற டேவிட் பாஸ்கரன், சுமார் 24 வருட சேவையைப் பூர்த்தி செய்துள்ளார். கடமையில் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு மிக்கவராகக் காணப்பட்ட இவர் கல்முனை மாநகர சபையின் சிறந்த ஊழியர் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அக்கராயன் – ஈச்சங்குளத்தை சேர்ந்த கௌரிராஜன்...

யானை தாக்கி மட்டக்களப்பில் நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின்...

வல்வெட்டித்துறைப் படுகொலை; இந்திய அரசிடம் 450 கோடி ரூபா இழப்பீடு கோரிக்கை!

இந்திய அமைதி காக்கும் படையினரால் 1989ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் நடத்தப்பட்ட படுகொலைகளில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும்...