குருநாகல் மாவட்டம், குளியாப்பிட்டியில் பல்லேவல பாலத்துக்கருகில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் வான் சாரதி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை வான் ஒன்று லொறியுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, 13 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment