Home தென்னிலங்கைச் செய்திகள் இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை அநுரவுக்கும் ஏற்படலாம் – முன்னாள் எம்.பி. ஹிருணிகா எச்சரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை அநுரவுக்கும் ஏற்படலாம் – முன்னாள் எம்.பி. ஹிருணிகா எச்சரிக்கை!

Share
Share

“இலங்கையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருடன் மாத்திரம் தொடர்புடையதல்ல. இன்று அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம். இது அரசியல் பழிவாங்கல் என்பதை உணர்ந்து கொண்டுள்ளமையால்தான் மக்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருக்கின்றனர்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மையல்ல என நீரூபிக்கப்பட்டால் அரசின் நிலைமை என்ன? இன்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடம்பெற்றுள்ள இந்த நிலைமை நாளை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படலாம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது எந்தவொரு தனிப்பட்ட விஜயமும் செய்வதில்லையா?

அவர் என்று ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுகின்றாரோ அதன் பின்னர் மேற்கொள்ளும் விஜயமே தனிப்பட்ட விஜயமாகக் கருதப்படும். எமக்கிடையிலான அரசியல் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் அவ்வாறே உள்ளன. அவற்றில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால், இன்று நாம் கூடியிருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்துக்காகும்.

குறிப்பாக இந்தப் பிரச்சினை ரணில் விக்கிரமசிங்க என்ற தனிநபருக்கானதல்ல. இதனை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பாரிய தவறிழைத்திருக்கின்றனர். அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவேதான் மக்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் கூடியிருக்கின்றனர்.

சட்டம் நடைமுறைப்படுத்தப்பட முன்னர் அது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் நபர் ஒருவர் ஸ்திரமாகக் கருத்து வெளியிடுவாரெனில் நாட்டில் சட்டத்தின் ஆட்சி எந்த நிலைமையில் இருக்கின்றது என்பதைப்  புரிந்துகொள்ள முடியும். இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் நாட்டில் அராஜக நிலைமை ஏற்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

அரசியல் நோக்கங்கள் எமக்கு முக்கியமல்ல – பிரதமர் ஹரினி!

தரவுகள், கொள்கைகள் மற்றும் சிறந்தவற்றை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும். அரசியல் நோக்கங்களோ அல்லது வேறு...

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...